கோவிட்
-19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் ,
தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.
( நிலை ) எண் . 65
பள்ளிக்கல்வித்துறை நாள் 29.07.2020 ல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில்
இணையவழிக்கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்
உள்ள அனைத்துப்பள்ளிகளும் அவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை
நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வரசாணையில்
, பள்ளிகளில் நடத்தப்பெறும் ணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும்
மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பத்தி 6.5 - ல்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும்
பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
6.5 .
1 ) இணையவழி வகுப்புகளில் வருகை , மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது.
2
) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை
புரியாத மாணவர்களும் , இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு
இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று
தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும் ,
3.
மிண்ணனு முறைகள் மற்றும் மிண்ணனு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு
தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் ( Assignments )
மற்றும் மதிப்பீடுகள் ( Assessments ) ஏதும் மாணவர்களின் இறுதித்தரம் /
மதிப்பெண்கள் செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக்
கணக்கிடப்படக்கூடாது.
4. ஆண்டுதோறும் , செப்டம்பர் மாதத்தில்
பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு
அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய
சூழ்நிலையில் , 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும்
காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது . எனவே ,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் 21.09.2020 முதல்
25.09.2020 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி
வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...