'போராட்டத்தில் பங்கேற்ற, 5,100 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய, அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' தெரிவித்துள்ளது.
'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், இரு தினங்களுக்கு முன் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.ஓ.சுரேஷ், மோசஸ் மற்றும் அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர். முறையிடப்பட்டதுகூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில், 2019 ஜனவரியில் காலவரையற்ற போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, 5,100 பேருக்கு, 'மெமோ' தரப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை, ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கு, பல முறை, முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் முறையிடப்பட்டது.ஆனாலும், ஒன்றரை ஆண்டுகளாக, கோரிக்கை நிலுவையில் உள்ளது.
மேலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் மற்றும் பேட்ரிக் ரைமண்ட் ஆகியோர் மீது, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக, தனியாக, '17 பி' பிரிவில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.ஜாக்டோ - ஜியோஇந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பள்ளி கல்வித் துறையை, ஜாக்டோ - ஜியோ வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தில் விவாதித்து, தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும். இதையொட்டி, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, மனு அளிக்கப்படும்.இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...