முன்னாள்
குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆண்டுதோறும்
செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும்
விழாவில் மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கும்.
இந்த
ஆண்டு கொரோனோ நோய் பரவல் காரணமாக ஆசிரியர் தினா விழா நடைபெறவில்லை. இதற்கு
பதிலாக அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நல்லாசிரியர்
விருதுகளை வழங்குகின்றனர். இதனையொட்டி நல்லாசிரியர் விருது பெறும்
ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி அன்று சென்னை
தலைமைச்செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, விருது
வழங்கும் நிகழ்வை துவக்கி வைக்க உள்ளார்.
செப்டம்பர்
5-ஆம் தேதி நடக்க இருந்த நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு முன்னாள்
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு காரணமாக 7-ஆம் தேதிக்கு
மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...