பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் பேட்டிகள் பெற்றோர்களை குழப்பியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை அதிமுக அரசு விளையாட்டாக நினைத்து செயல்படுகிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது. மாணவர்களை வீட்டில் கடிதம் வாங்கி வர சொல்வது பழியை பெற்றோர் தலையில் போட உள்நோக்கம் உள்ளது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகள் திறக்கும் அரசாணை எந்த ஆலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் மூலம் சந்தேகங்களை கேட்கலாம் என கூறிவிட்டு அவசரகதியில் பள்ளிகளை திறப்பது புரியாத புதிராக உள்ளது. கொரோனா அதிகரிக்கும் நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது. பெற்றோரிடம் கடிதம் பெற்றுவிட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சுடலை நீ மூடிட்டு உன் குடும்பத்தின் நிலைமை மட்டும் பாரு.. எந்த விசயம் சொன்னாலும் உடனே எதிர்ப்பு சொல்றது...இந்த பிழைப்பு பிழைக்க எதுக்கு வேட்டி சட்டை
ReplyDelete