Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிரடி எதிர்பார்க்கும் தேர்வர்கள்!

மிக மிக துரித கதியில் செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த ஊரடங்கு காலத்தில் மிக மிக அலட்சியமாகசெயல்பட வில்லை எனபதை விரைவில் நிரூபிக்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
கணினி பயிற்றுநர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர், சட்ட கல்லூரி பேராசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வு, வட்டார கல்வி அலுவலர் என அனைத்து தேர்வுகளிலும்... 

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 2013 ம் ஆண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்கள் காலாவதி ஆகிகொண்டிருக்குறது. 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வான ஆசிரியர்களுக்கு இது வரை எந்த ஒரு அரசு ஆசிரியர் பணியும் வழங்கவில்லை. அவர்கள் எதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை தேர்வை எழுதினார்கள் என்றும் தெரியவில்லை. 

கணினி பயிற்றுநர்கள் தேர்வு இணையவழி நடந்தது 23.06.2019, ஆனால் இதுவரை கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் கிடைக்கவில்லை. 

சட்ட கல்லூரி பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் என அனைத்து தேர்வுகளிலும் முடிவுகள் தாமதமாகவே வெளிவருகிறது.

வட்டார கல்வி அலுவலர் தேர்வுகள் 14.02.2020 முதல் 16.02.2020 வரை இணையவழி நடைபெற்றது, இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை.
தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அதிகமான ஆசிரியர்கள் வேலை இல்லாமல், மாத சம்பளம் ஏதுமில்லாமல் இருக்கிறார்கள். சிலர் கூலி வேலையும் பார்த்து வருகிறார்கள். 

இப்படி பட்ட சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதி வேகமாக செயல்பட்டு, ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு, ஆசிரியர்களின் துயரை குறைக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை பொறுத்தவரை மாவட்ட தலைமை கல்வி அலுவலகம்( CEO OFFICE) வழியாக தான் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். 

தற்போது உள்ள தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி, மாவட்டங்களுக்குள் மக்கள் சென்று வர முழுமையான அனுமதி உள்ளது.
ஆசிரியர்களின் குறைகள் மற்றும் தமிழக அரசின் தளர்வுகளின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதி வேகமாக செயல்பட்டு, ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டும், வேலையில்லாமல் இருக்கும் மற்ற ஆசிரியர்களின் துயர் துடைக்கவும் அரசு முன்வர வேண்டும். 

இப்படிக்கு - தமிழக முதல்வர்  நல்  ஆசியுடன் விரைவில் அரசு பணியில் சேர காத்திருக்கும் தேர்வர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive