Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Student Admission - அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்




தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் ஜூன் மாதத்தில் துவங்கவேண்டிய பள்ளிகளானது தற்போது மாணவர் சேர்க்கையும் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள அரசு பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ் வழி கல்வி, ஆங்கில வழி கல்வி என இரண்டு வழி கல்விகளுக்கும் இன்றைய தினம் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே விண்ணப்பங்களை பெற்ற பெற்றோர்கள் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதில் ஆங்கில வழி கல்வி கற்பதற்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு தரப்பில் அதிகபட்சமாக காலை, பிற்பகல் மற்றும் மாலை என 20 பேர் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தொடர்ந்து, அதிகளவில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு மாணவர் சேர்க்கைக்காக வரக்கூடிய பெற்றோர்கள் அதிகளவில் இருப்பதால் எந்த தினத்தில் குழந்தைகளுடன் வந்து மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்பது தொடர்பான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. குறைந்த அளவில் தமிழ் வழி கல்விக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இன்றைய தினம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது




1 Comments:

  1. https://b.sharechat.com/ciVh2Uoc18?referrer=whatsappShare
    #🎒 அரசு பள்ளிகளில் சேர்க்கை
    அரசுப்பள்ளியில் படித்தவர்கள் அனைவரும் வாழ்க்கையில் தாழ்ந்து போய்விடவில்லை. பிறகு, அனைத்து வசதிகளும் கொண்ட அரசு பள்ளிகளில், ஏன் அதிக மாணவர்கள் சேரத் தயங்குகிறார்கள்?
    மிக முக்கியமான காரணம்,
    அரசு பள்ளிகளில் பயின்று, வாழ்வில் உயர்ந்த ஒரு சிலர் தவிர, மற்றவர்கள், தாங்கள் அரசுப்பள்ளி மாணவர்கள் என வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதே. வாழ்வில் நல்ல நிலையில் இருந்த, இருக்கும்,நீங்களோ, உங்களைச் சார்ந்தவர்களோ, பொதுமக்களிடம் வெளிப்படையாகச் சொல்லும்போது தான், தன்னம்பிக்கையை வளர்க்க இயலும். நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளில், நம் குழந்தைகளைச் சேர்த்து, சிறந்த சமுதாயத்தை மலரச்
    செய்வோம். உங்களின் தன்னம்பிக்கையூட்டும், கருத்துகள், பிஞ்சுக்குழந்தைகளின் எதிர்காலம் மலர உதவட்டும்....
    Think & Share

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive