Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வி - Special Fees இழப்பீட்டுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20200820_154732
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2008-09ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி , பார்வை 3 - ல் காணும் இவ்வியக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின்படி 2020-2021ஆம் கல்வியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான தேவை பட்டியலை 15.09.2020 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive