தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறை எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், 'யூ~டைஸ்' படிவத்தில் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில பள்ளிக்கல்வி தகவல்கள், சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன.
மாவட்ட வாரியாக, 'யூ~டைஸ்' எனும், மாவட்ட கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
அனைத்து
வகை பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்,
மாணவர்கள் விகிதம், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை என, பல்வேறு தலைப்புகளின்
கீழ், கிட்டத்தட்ட, 150க்கும் மேற்பட்ட கேள்விகள், இப்படிவத்தில்
இடம்பெற்றுள்ளன.
அரசுப்பள்ளிகளுக்கு கல்விசார் நிதி,
இத்தகவல் அடிப்படையில் ஒதுக்கப்படும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
'ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எமிஸ் எண் உள்ளது.
இத்தகவல்களை,
யூ~டைஸ் படிவத்தில் இணைத்து, அனைத்து வகை தகவல்களையும் புதுப்பிப்பது
வழக்கம். இப்படிவத்தை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சரிபார்த்த பிறகு, மத்திய
அரசின் ஒப்புதலுக்கு, இணையதளத்தில் பதிவேற்றுவர்' என்றனர்.
2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
ReplyDeleteமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
தவித்து வருகிறார்கள்.
ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக
ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிநியமனம் செய்ய
போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
அவர்களை பணியமர்த்த வேண்டும்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
பணிவழங்க வேண்டும்
பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்