அரசு
கலைக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் மூலம் மாணவர்கள் விரும்பிய அரசு கல்லூரியை தேர்ந்தெடுத்து
பயிலாம். இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர்
பார்த்தசாரதி கூறுகையில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்
மாணவர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள நூலகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 130 பாடப்பிரிவுகள் சார்ந்த பாடப்புத்தகங்களை
50 சதவிகித தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்க இருப்பதாக தெரிவித்தார் .
மேலும்
தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களின் வசதிக்காக பாடத்திட்டங்கள் மற்றும்
பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டு வாரந்தோறும் விரும்பும் மாணவர்களுக்கு
ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறினார்.
மத்திய
அரசின் வழிகாட்டுதல்படி , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்
பயிலும் மாணவர்களின் வசதிக்காக அவர்களின் குறைகளை தீர்க்க புதிய இணையதள
பக்கம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அரசு கலை
அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள்
விண்ணப்பித்து இருப்பதாக கூறினார்.
மேலும், அந்த
கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அவர்கள் விரும்பும் அரசு கல்லூரி
மற்றும் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து திறந்தநிலை
பல்கலைக்கழகத்தின் வாயிலாக பயில்வதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு
வருவதாக தெரிவித்தர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...