கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, இலவச எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு, நேற்று துவங்கியது.
பதிவு செய்ய, செப்., 25 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.கட்டாய மற்றும்
இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், 25
சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, ஆண்டுக்கு, 2 லட்ச ரூபாய்க்குள் வருமானம்
இருக்க வேண்டும்.
இதற்கான சான்றிதழை, பெற்றோர் தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு கல்விக்
கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும்.இந்த ஆண்டுக்கான இலவச
மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், செப்., 25 வரை பெற்றோர்
பதிவு செய்யலாம்.தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக பள்ளிகள்
பட்டியலிடப்பட்டு, பெயர்கள், வகுப்பு மற்றும் காலிஇடங்களின் விபரம்
குறிப்பிடப்பட்டுள்ளன.மாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார்,
ரேஷன் அட்டை, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் சிறப்பு
பிரிவினருக்கான சான்றிதழ் ஆகியவற்றை, தயாராக வைத்திருந்து பதிவு செய்ய
வேண்டும் என, மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்துள்ளது. சேவை மையங்கள் அமைப்பு
இலவச மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களில்,
சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி , வட்டார கல்வி அலுவலகம், வட்டார
கல்வி மண்டல மையம் ஆகியவற்றில், சேவை மையங்கள் செயல்படுகின்றன.சென்னையில்,
எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட
கல்வி அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள மேற்கு கல்வி மாவட்ட அலுவலகம்,
சூளைமேட்டில் உள்ள கிழக்கு கல்வி மாவட்ட அலுவலகங்களில், பெற்றோர் நேரடியாக
சென்று, இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...