ஆகஸ்ட்
17 முதல் ஆதார் அட்டை / குடும்ப அட்டை மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும்
உடனுக்குடன் E-PASS வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்குமாறு முதல்வர் அறிவிப்பு.
பொதுமக்கள்
முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (
மாவட்டங்களுக்கு இடையே ) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை
விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் , E - Pass
அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் , விண்ணப்பித்த
அனைவருக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . பொதுமக்களின் நலன் கருதி
எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை , அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற
பயணங்களை தவிர்க்கவும் , தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் E - Pass க்கு
விண்ணப்பம் செய்து , E - Pass பெற்று பயணிக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின்
நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும் , அரசின் நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...