பொறியியல்
கலந்தாய்விற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் மட்டுமே
கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர் என பொறியியல் சேர்க்கை செயலாளர்
புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கு கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . இதனையடுத்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் கலந்தாய்விற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 31ஆயிரத்து 436 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர் . இவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர் .இவர்களில், சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்கள் மட்டும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...