பள்ளி கல்வி அலுவலக ஊழியர்களுக்கு, கலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசு
பள்ளிகளில், ஓவியம், கலை, கைவினை, வேளாண்மை மற்றும் தையல் ஆகிய சிறப்பு
பாடப் பிரிவுகளில், கால முறை ஊதியத்தில், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
அதேபோல், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பாட ஆசிரியர்கள்,
தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், கலை
ஆசிரியர் பதவியில், 20 சதவீத இடங்களை, கல்வி துறையின் அலுவலக
பணியாளர்களுக்கு ஒதுக்கி, அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள்
நடந்து வருகின்றனஇந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்கத் தலைவர், ராஜ்குமார்
கூறியதாவது:
அரசு பள்ளிகளில், பகுதி நேரமாக பணியாற்றும் கலை ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி, மனு அளித்து வருகின்றனர்.
பல
ஆண்டு அனுபவம் உள்ள அவர்களை நிரந்தரம் செய்யவில்லை.மாறாக, நிர்வாக பணியில்
உள்ள ஊழியர்களுக்கு, பதவி உயர்வாக, கலை ஆசிரியர் பதவி அளிப்பது ஏற்கக்
கூடியது அல்ல. ஏற்கனவே, நிரந்தரம் செய்வதற்காக, 5,000க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும், பணி நிரந்தரம்
செய்ய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை
நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வி பணியாளர்களை மட்டும், போட்டி
தேர்வு இல்லாமல் நியமிப்பது, பாரபட்சமான நடவடிக்கை. எனவே, இந்த முடிவை,
அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...