புதிய கல்வி கொள்கை கீழ் உருமாறும் உயர்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் மாநாட்டில் கொணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது. புதிய கல்வி கொள்கை நமது நாட்டின் கல்வி முறையை ஆய்வு செய்துள்ளது. புதிய கல்வி கொள்கையில் எந்த வித பாகுபாடும் இல்லை. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர்.மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு ஒன்றி கல்வி கற்க வேண்டும். கல்விக்கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக வேண்டும் என்றார்.
கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி. எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராகவுள்ளனர் என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது. கல்வி மற்றும் திறன் மூலம் நமது இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும். திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது. பரந்துபட்டு மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
பழைய கல்வி கொள்கை நமது இளைஞர்களை வலுப்படுத்துவதாக இருந்ததா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக்கொள்கை அவசியம். ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். 21-ம் ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மிகப்பெரிய சவால் என்று தெரிவித்தார். புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறை வலுப்பெறும். நமது கல்வி முறை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம். மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...