கூடுதல்
கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர் புகார் அளித்தால் தனியார்
பள்ளிகள் மீது நடவடிக்கை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபி அருகில் உள்ள
கொளப்பலூர், நம்பியூர், எலத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கோழி
அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 640 ஏழை பெண்களுக்கு அசில் கோழிகுஞ்சுகளை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாது:
கோபியில் 24 மணி நேரம் செயல்படும் கால்நடை பாலிகிளீனிக்
தொடங்கப்படுகிறது. கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் இன்னும்
அதிகமானபேருக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். கோழிகளுக்கு வாரத்திற்கு ஒரு
நாடுள் போடும் தடுப்பூசியை 2 நாட்களாக வழங்க முதல் அமைச்சரின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்படும்.
அரசு பள்ளிகளில் ஒரு ரூபாய் கூட
வசூல் செய்யப்பட வில்லை. தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக
வாயில் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு பெற்றோர் எழுத்துமுலமாக
புகார் கொடுத்தால் கூட அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.மோளை ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிக்கை
அரசுக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
நடந்து வருகிறது. மாணவர்சேர்க்கை மற்றும் பாடப்புத்தங்கள்
வழங்குவதற்காகவும், அரசு
வழங்கும் விலையில்லா பொருட்களை
வழங்கவும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். இந்த ஆண்டு 1
லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்ந்து உள்ளனர். செப்டம்பர்
வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். கொரோனோ காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார
நெருக்கடியினால் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விருப்பம்
தெரிவித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான
பாடபுத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. கோபியில் கல்லூரி, அந்தியூர்,
தாளவாடியில் பள்ளிகள், பெருந்துறையில் தனியார் திருமண மண்டபம் என கூடுதல்
கொரோனோ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் அரசு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...