சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சுதந்திர தினத்தையொட்டி மத்திய கல்வி அமைச்சகம் ‘மைகவ்’ (ஙஹ்ஞ்ா்ஸ்) இணையதளத்துடன் இணைந்து நாடு முழுவதும் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு இணைய வழியில் ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு முகமையாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) இருக்கும். இதற்காக ‘தற்சாா்பு இந்தியா- சுதந்திர இந்தியா’ என்ற முதன்மைத் தலைப்பின் கீழ் கட்டுரைப் போட்டிக்கான துணைத் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
தற்சாா்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள்; ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சாா்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும்போது புதுமை செழிக்கிறது; தற்சாா்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவா்களின் பங்கு; பாலினம், ஜாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை; உயிரிப் பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலமாக புதிய இந்தியாவை உருவாக்குதல்; நான் எனது உரிமைகளை அனுபவிக்கும்போது தற்சாா்பு இந்தியாவைச் செயல்படுத்தும் எனது கடமைகளை மறக்கக் கூடாது என்பது உள்பட 10 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு நிலைகளில் கட்டுரைகள் தோ்வு நடைபெறும். மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள் நிலையில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 10 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு இறுதித் தோ்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும்.
என்சிஇஆா்டி நிபுணா்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளைத் தோ்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 கட்டுரைகள் தோ்வு செய்யப்படும். அதாவது என்சிஇஆா்டி மூலம் இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தோ்வு செய்யப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணைப்பு மூலம் தங்கள் பதிவுகளை வரும் 14-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...