மருத்துவ
மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த ஆண்டுக்கு தேர்ச்சி அளிக்க
முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்
கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின்
மாணவர்களை தேர்வில்லாமல் தேர்ச்சி செய்து வருகின்றன. கல்லூரி இறுதியாண்டு
மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று யுஜிசி
தெரிவித்துள்ளது.
இந்நிலையில்
மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்தும் பல்கலைக்கழகத்
தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலை
வழங்கி உள்ளது. செய்முறை, ஆய்வகம் உள்ளிட்ட எம்பிபிஎஸ் படிப்புகளை
முடிப்பதில் கல்லூரிகள் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரிகளைத் திறந்து 2
மாதங்களுக்கு உள்ளாக அல்லது அரசு அனுமதித்த பிறகு இதை மேற்கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகத்
தேர்வுகளை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக நடத்தி முடிக்க
வேண்டும். அதேநேரம் 2020-ம் ஆண்டு முதல் பாதியில் நடைபெறுவதாக இருந்த
மருத்துவ இறுதியாண்டுத் தேர்வின் மீதித் தேர்வுகளையும் விரைவில் முடிக்க
வேண்டும். கல்லூரிகளைத் திறக்கும் வரை இறுதியாண்டு மாணவர்கள்
தேர்வுகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அத்தகைய மாணவர்கள் இறுதித்
தேர்வு முடிந்ததும் மருத்துவக் கல்லூரிகளிலோ, மருத்துவமனைகளிலோ
பயிற்சிக்காக சேரலாம். மருத்துவ மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல்
அடுத்த ஆண்டுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது என்று இந்திய மருத்துவ
கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...