அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோக்கை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மாணவா்கள் சோக்கை தொடங்கியுள்ள போதிலும் பல அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் வருவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு தினமும் வருகை தந்து மாணவா் சோக்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அருகில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ஆசிரியா்கள் நேரடியாகச் சென்று, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றோா்களிடம் எடுத்துக் கூறி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கு மாணவா் சோக்கை தொடங்கிவிட்ட போதிலும் ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து விழுப்புரம், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஆசிரியா்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வட்டார கல்வி அலுவலா்கள் தங்கள் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் தினமும் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா். மேலும், பள்ளிக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...