நாளை பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.இதனால்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்தது.
இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2
முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை
விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி நாளை
முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப்
பின்பற்றும் வகையில் தலா 20 மாணவர்களாக பள்ளிக்கு வரவழைத்து
பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை
பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...