தமிழகத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக மார்ச்16ந் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது, சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு தினமும் இஞ்சி,, பூண்டு, மிளகு உணவில் சேர்க்கப்பட்டு தினமும் முட்டை வழங்குவதன் மூலமாக புரதசத்து வைட்டமின் சத்துகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்று விடுமுறையின் காரணமாக மதிய உணவு கிடைக்காத பட்சத்தில் சத்து குறைவான குழந்தைகளாக உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் சத்துணவு சமைத்து வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட்டால் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு சத்துணவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக சத்துணவு மற்றும் சமூக நல ஆணையாளர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு பணமாக வங்கியின் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அனுப்புவதற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்த்திடவும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 7ம் தேதி அன்று முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனநாயக முறைப்படி சமூக இடைவெளி யோடு முககவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
இதனைத்தொடர்ந்து, ஊரடங்கில் போராட்டம் நடத்தியதற்கு சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பள பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...