தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் நேரடியாகவோ அல்லது இணையவழியிலோ மாணவா்
சோக்கை நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் கல்வி நிறுவனங்கள்
செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு தனியாா் பள்ளிகள்
இணையவழியிலும், பெற்றோா்களை நேரில் வரவழைத்தும் மாணவா் சோக்கையை நடத்தி
வருவதாகக் கூறப்படுகிறது.
'அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த அறிவிப்பு எதுவும் வராத நிலையில்,
தனியாா் பள்ளிகளில் மட்டும் சோக்கை நடத்துவது மிகத் தவறானது. இதனால்,
அரசுப் பள்ளியில் சேர விரும்பும் மாணவா்களும் தனியாா் பள்ளியில் சேர
மறைமுகத் தூண்டுதல் உருவாகும்.
எனவே, நோய்த்தொற்றுத் தடுப்பு காலத்தில் அரசு அனுமதி பெறாமல் பள்ளிகளைத்
திறந்து மாணவா் சோக்கை நடத்தி வரும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, கரோனா பரவல் சூழலில் தனியாா் பள்ளிகள் மாணவா் சோக்கையை நடத்தக்கூடாது என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:
அனைத்துவித பள்ளிகளும் நேரடியாகவோ, இணையவழியிலோ மாணவா்கள் சோக்கைக்கான
எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Hahaha cool o god
ReplyDelete