புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று, அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் அவசியமாகியுள்ளது. அலுவலக வேலைக்கும், 'ஜூம், கூகுள் மீட், ஜியோமீட்' மற்றும் பிற வீடியோ-கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கும், மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியம் ஆகிவிட்டன.ஆனால் ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவாகும் என்ற மனநிலையே மக்களிடம் உள்ளது. இதை மாற்றும் வகையில், இந்த மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான பட்ஜெட் விலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளன.
குறிப்பாக, போகோ எம்2 ப்ரோ (POCO M2 Pro) 4 ஜி.பி., ரேம் மற்றும் 64 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் - 13,999 ரூபாயாகவும், 64 ஜி.பி., ஸ்டோரேஜ், 6 ஜி.பி., ரேம் விலை 14,999 ரூபாயாகவும் உள்ளது. ரியல்மி 6ஐ, 4 ஜி.பி., ரேம் மாடலுக்கு 12,999 ரூபாயாகவும், மைக்ரோ எஸ்.டி., கார்டு வழியாக 256 ஜி.பி., வரை விரிவாக்கக்கூடிய டாப் எண்ட் 6 ஜி.பி., ரேம் மாடலுக்கு 14,999 ரூபாய்க்கு சந்தைக்கு வந்துள்ளது. இதேபோல், ரெட்மி நோட் 9 ப்ரோ 6 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
சாம்சங் எம்21, 4 ஜி.பி., ரேம் மற்றும் 64 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜி.பி., வரை விரிவாக்கக்கூடியது) கொண்டது 13,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோல், விவோ ஒய் 30, 4 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.14,999க்கு கிடைக்கிறது.
இப்படி, பட்ஜெட் விலையில் இந்த ஆக., மாதம் அறிமுகமாகியுள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை வாங்க பல்வேறு தரப்பினரும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...