''பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில், எந்த குளறுபடியும் இல்லை,''
என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு
மாவட்டம், பவானிசாகர் அணையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு,
தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர்
செங்கோட்டையன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு
மதிப்பெண் வழங்கப்பட்டதில், எந்த குளறுபடியும் இல்லை. காலாண்டு, அரையாண்டு
தேர்வுகளில் பெற்ற மதிப்பெண், வருகை பதிவேடு அடிப்படையில், மதிப்பெண்
வழங்கப்பட்டு உள்ளது.
மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி
என்பது, தேவையற்ற விமர்சனம். 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில்,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுப்பது,
அரசின் கொள்கை முடிவு. பள்ளிகள் திறக்காத இந்நேரத்தில், அதைப்பற்றி எதுவும்
கூற முடியாது. ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, 763
பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோபியில் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ., ஜெயராமன்தலைமை வகித்தார். அமைச்சர் செங்கோட்டையன், பவானிசாகர்
எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
Matriculations schools have no test paper ; new report card and top sheet only
ReplyDelete