அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விண்ணப்பித்த 40 சதவீதம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை.
தமிழகத்தில்
109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் 92
ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சேர 3 லட்சம் பேர் ஆன் லைனில்
விண்ணப்பித்தனர். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி, மாற்றுச்சான்றிதழ்கள்
பதிவேற்றம் செய்ய ஆக. 10 வரை அவகாசம் வழங்கப் பட்டது.உயர்கல்வி துறையில்
ஆன் லைன் விண்ணப்பங்களை எந்தெந்த கல்லுாரிகளுக்கு எவ்வளவு பேர்
விண்ணப்பித்துள்ளனர் என பிரிக்கும் பணி நடக்கிறது.
இதில்
40 சதவீத பேர் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வில்லை. 'சர்வர்'
இணைப்பிலும் குளறுபடி ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு
விண்ணப்ப விபரங்களை அனுப்பி அவர்களுக்கு தகவல் தெரிவித்து நேரில் ஒரிஜினல்
சான்றிதழ் சரி பார்க்கப்பட உள்ளது. இப்பணி முடிந்து கட்-ஆப் அடிப்படையில்
'சீட்' ஒதுக்கப்படும். புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளில் காலியிடங்கள்
இருந்தால் அப்போது விண்ணப்பம் பெற்று பரிசீலிக்க உயர்கல்வி துறை அனுமதி
வழங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...