கேரளாவின்
பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று
முன்தினம் தொடங்கியது. பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஓணம்
பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களையிழந்துள்ளது. பண்டிகையை
மக்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட வேண்டும்; பொது இடங்களில் ஓணம்
கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு
விதித்துள்ளது.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி
மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்
ஓணம் பண்டிகையான வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு
உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட
ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.
உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அறிவிக்கப்படும் வேலை நாளானது பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...