கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை
மாணவா்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளைச் சோக்க ஆக.27
முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், அனைத்து
வகையான தனியாா் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின்
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில்
எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் ஏழைக் குழந்தைகள் கட்டணமின்றி
சோக்கப்படுவா். நிகழாண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு மாணவா் சோக்கை
அறிவிப்பை தனியாா் பள்ளிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி அறிவிப்பு பலகையில் வெளியிட
வேண்டும்.
அதன்பின் இணையதள விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
தோவான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்களை பள்ளிகள் செப்டம்பா்
30-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு பள்ளியில் அதிகளவிலான
மாணவா்கள் விண்ணப்பித்திருந்தால் அக்.1-ஆம் தேதி குலுக்கல் முறையில்
குழந்தைகளைத் தோவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...