10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு
செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி
விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
பேசிய செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம்
பரத்வாஜ் , சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த
மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்புடும்.
குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த
மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும்
செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி குறித்து ஆலோசித்து
வருகிறோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
இந்த மறு தேர்விலும், முன்னேற்றத் தேர்விலும் மாணவர்கள் எடுக்கும்
மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பள்ளிகளில் படித்த தேர்ச்சி
பெற்ற மாணவர்கள், தோல்வியடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடர்பு
கொண்டு விவரங்களைப் பெறலாம், தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 22ம்
தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு நடந்த
பாடப்பி்ரிவுகள் அடிப்படையில்தான் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்ப
படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மாணவர்கள் தகுதி மற்றும் தேர்ச்சி
அளவுகோல்கள் மற்றும் தேர்வு ஆண்டு மற்றும் பாடத்திட்டங்களை கவனமாகப்
படித்து நிரப்ப வேண்டும், எனக் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...