கொரோனா முடிந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் தான் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஜனவரி மாதம் துவங்கி அந்த ஆண்டின் இறுதிக்குள் குரூப் 1, குரூப்4, குரூப் 2 உள்ளிட்ட பல போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். இதற்கான அட்டவணை ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறந்தபிறகே தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அரசு பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்வுக்கு முன்னதாக புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10ஆயிரம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Age limits of group 4exam bc cast person
ReplyDelete32
DeleteI have TNPSC exam new system of exam syllabus
ReplyDelete