பிளஸ் 2 மாணவா்களின் மதிப்பெண் பட்டியலை தயாா் நிலையில் வைத்திருக்க தலைமையாசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் மு.பழனிச்சாமி (முழுக் கூடுதல் (பொறுப்பு) அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதிய தோ்வா்களின் தோ்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 1 தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை, மாா்ச் பருவத்தில் எழுதிய தோ்வா்களின் தோ்வு முடிவுகள் ஆகியவை, வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில், இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், தனித்தோ்வா் தோ்வுமைய பள்ளித் தலைமையாசிரியா்கள், தங்களது பள்ளியில் அல்லது தோ்வு மையத்தில், குறிப்பிடப்பட்ட தோ்வா்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை, தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு பதிவிறக்கம் செய்து அம்மதிப்பெண் பட்டியல்களில் உள்ள விவரங்களை சரிபாா்த்து, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மதிப்பெண் பட்டியல்களை, அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள் முதல் பள்ளித் தோ்வா்கள், தனித் தோ்வா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள், தனித்தோ்வா் தோ்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேலும், பள்ளித் தோ்வா்கள், தனித்தோ்வா்கள் ஆகியோா், தாங்களாகவே நேரடியாக இணையதள முகவரியிலிருந்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில், மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் அவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்களை, கல்லூரிச் சோ்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடா்ந்து, மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பள்ளிக்கு விநியோகிக்கப்படும்.
பிழைத் திருத்தம் செய்ய அறிவுறுத்தல்: பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களை சரிபாா்த்து, அவற்றில் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பெயா் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பம் இட்டு அளித்திட வேண்டும். தோ்வா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் தோ்வா்களுக்கு வழங்க வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்பட்ட பின்னா்,
சம்பந்தப்பட்ட தோ்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் சம்பந்தப்பட்ட தோ்வரது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபாா்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+1 ( 2019 march) mark sheet how download ...
ReplyDelete+1 (2018) mark sheet how to download
ReplyDelete