நாட்டில் இனி எம்.ஃபில்., படிப்பு நிறுத்தப்படுவதாகவும், உயர்கல்விக்கு இடையே ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் கரே, அதன் விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டில் எம்.ஃபில்., (M.Phil.,) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது பொறியியல் போன்ற உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கல்விக் கொள்கை குறைத்து மாநிலங்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...