Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா பணியாளர்களின் குழந்தைகளுக்கு Free Education!

isari-ganesh

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களின் குழந்தைகள் 300 பேருக்கு கட்டணமில்லா கல்வி வழங்க இருப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து வரும் முன்கள பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என மூன்று துறைகளில், ஒரு துறைக்கு 100 என்ற அளவில் மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மொத்தம் 300 மாணவ, மாணவியருக்கு, 2020-ம் ஆண்டின் +2 மதிப்பெண் அடிப்படையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள் 9003461468 / 9952018671 / 8807307082 / 9445507603 / 9445484961 / 99620 14445 என்ற எண்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ் அப் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive