பிறந்த தினமான ஜுலை 15 ம் நாளினை நாம்
கல்வி வளர்ச்சி நாளாக
போற்றிப் பாதுகாத்து வளர்க்கிறோம்!
மனிதனின் வாழ்விற்கு கல்வியின் அவசியத்தினை, பங்களிப்பினை பெற்றோருக்கும் ,குழந்தைகளுக்கும்
சென்று சேரும்படி நல்ல திட்டங்களை தந்து கல்வி வழிகாட்டி மாணவர்களின் வாழ்க்கையில்
வெளிச்சம் தந்த கல்வித் தந்தை
உயர்திரு காமராஜர் அய்யா அவர்கள் !
அவர்களது பிறந்த நன்னாளில்
இந்த இணைய வழிகற்றலில்
மாணவர்களை படிக்கச் செய்து ,
பங்களிக்க வைத்து நாட்டின் வளர்ச்சி மற்றும்
சுயமனிதனின் மகிழ்வான வாழ்க்கைக்கு
உதவிடும் வண்ணம் ஒரு முயற்சி !
படிக்காத செல்வந்தர் பலருண்டு !
படித்த தரித்திரன் நிறைய உண்டு! ஆனாலும் கல்வி அத்தியாவசியம்
கல்வி தன்னம்பிக்கை தரும் !
கல்வி வாழும் வழி அறியும்!
எண்ணும் எழுத்தும் ஒருவரின் கண்களாகும் !
கண்ணால் பார்த்து நிறைவடைய முடியாது !
காதால் கேட்டு நிறைவடைய முடியாது
சிந்தனைக்கு எல்லையே கிடையாது ! ஆம்
கல்விக்கு முடிவேயில்லை.!
கற்றலுக்கு எல்லையில்லை !
காண்பதுவும்,கேட்பதுவும் ,சிந்திப்பதுவும்
ஒரு தனி மனிதனை மனிதநேயமுள்ள
மனிதனாய் மாற்றும் !!
மாணவப்பருவத்திலே நிறைய
தெரிந்து, அறிந்து ,உணர்ந்து ,விரிவு செய்து ,
தன்னால் ஆன பங்களிப்பை தந்து
தாய் நாட்டின் வளர்ச்சிக்கும்
சக மனிதர்களிடம் சகோதரத்துடனும், சாமர்த்தியத்துடனும் மகிழ்வுடனும் வாழ கல்வி அவசியம் !
இதற்கு பெரும் பங்காற்றிட்ட காமராஜர் அய்யா அவர்கட்கு
கோடான கோடி நன்றிகள் !!
Dr.J.komalalakshmi
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...