மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,
மாவட்ட கல்வி அதி காரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தை பறிக்க
பள்ளிக் கல்வித்துறை முடிவு செய் துள்ளது .
தமிழகத்தில்
32 மாவட் டங்களில் முன்பு இருந்த மெட்ரிக்குலேஷன் ஆய்வா ளர்கள் 17 ,
ஆங்கிலோ இந்தி யன் பள்ளிகள் ஆய்வாளர் 1 , 32 மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரிகள் 32 பேர் உள்பட மொத்தம் 68 கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர் .
இந்த அதிகாரிக ளின் பதவி மற்றும் அதி காரம் தொடர்பாக சில திருத்தங்களை
பள்ளிக் கல்வித்துறை செய்து 2018 ல் ஒரு அரசாணை வெளியிட் அதன்படி மேற்கண்ட
கல்வி அதிகாரிகள் 68 பேர் என் பதை விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் 120
பேர் நியமிக்கப்பட்டனர் .
அவர்களுக்கு கூடுதல்
அதி காரம் வழங்கப்பட்டது . இதன்படி , அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் , மாவட்ட கல்வி அதிகா ரிகள் அதிக அதிகாரம் பெற்றவர்களாக மாறத்
தொடங்கினர் . இதனால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்கு நர்களுக்கு
அதிகாரம் இல்லாமல் போனது . ஒரு ஆசிரியரை மாற்ற வேண்டும் என் றாலும் அந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகா ரியைத் தான் இயக்குநர் கள் எதிர்பார்த்து
இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது .
இதனால்
பள்ளிக் கல்வித்துறையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக
பள்ளிக் கல்வித்துறை திண்டாட்டத்துக்கு வந்து விட்டது . மேலும் கடந்த 3
ஆண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகு வாக குறைந்து பள்ளியில்
படித்தமாணவர்கள் அதிக அளவில் வெளியேறினர் .
தேர்விலும்
மாணவர்கள் குறைவாகவே பங்கேற்றனர். ஆசிரியர்கள் மாறுதல்கள் , அவர்கள் மீது
எடுத்த நடவடிக்கைகளால் மனம் நொந்தனர் . இந்நிலையில் , பள்ளிக் கல்வித்துறை
கொண்டு வந்த மேற்கண்ட 101 அர சாணையில் மீண்டும் திருத் தம் செய்து , மாவட்ட
கல்வி அதிகாரிகளுக்கு வழங்கிய அதிகாரங்களை திரும்பப் பெறபள்ளிக்
கல்வித்துறை முடிவு செய்துள்ளது . இதற் கான அறிவிப்பு மற்றும் அரசாணை
விரைவில் வெளியாக உள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...