சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த நாமக்கல் மாணவியை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய பிரதமர் மோடி!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்த நாமக்கல் மாணவி
கனிகாவிற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர
மோடி.
பொதுமக்களிடம் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று
உரையாடினார். அப்போது பேசிய அவர், "நம் நாட்டில் COVID-19 மீட்பு விகிதம்
மற்ற நாடுகளை விட அதிகமாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக்
காப்பாற்ற முடிகிறது, ஆனால் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும்
முடிவடையவில்லை. நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா வைரஸ்
ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே இன்னும் ஆபத்தானதாக இருக்கிறது என்பதை நாம்
நினைவில் கொள்ளவேண்டும்" என்று கூறினார்.
குடும்பத்தினருடன் மாணவி கனிகா
பின்னர் பொதுமக்களுடனான உரையாடலின் போது, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த
கனிகா என்ற மாணவியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது,
"நாமக்கல் என்றால் முதலில் ஆஞ்சநேயர் கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால்,
இனி நீங்கள் நினைவுக்கு வருவீர்கள். உங்களது தந்தை அனைவருக்கும் சிறந்த
எடுத்துக்காட்டாக உள்ளார். உங்கள் கனவு நிறைவேற நான் வாழ்த்துகிறேன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று
கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 490 மதிப்பெண்கள்
பெற்றிருந்த கனிகாவை பிரதமர் மோடி தொலைபேசியில் பாராட்டியது கனிகாவின்
குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கனிகா,
"பிரதமரிம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் அலுவலகத்தில்
இருந்து எங்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இன்னும் சிறிது நேரத்தில்
பிரதமர் உங்களுடன் பேசுவார் என்று கூறினர். மிகவும் ஆவலாக காத்திருந்து
பின்னர் பேசினேன்" என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...