உத்தரபிரதேசத்தில் இரட்டையர்கள் சிபிஎஸ்இ தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஏராளமான
மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில்
நொய்டாவை சேர்ந்த இரட்டையர்கள் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்
பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் மன்சி மற்றும் மன்யா
இருவரும் உருவம், குரல் என அனைத்திலும் ஒரே மாதிரியாக காணப்படுகின்றனர்.
இதில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, தேர்விலும் ஒரே மதிப்பெண்
பெற்றுள்ளனர். இருவரும் 95.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் தலா 98, இயற்பியல், வேதியியல்,
உடற்கல்வி பாடங்களில் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவி மன்சி கூறுகையில், 'அனைத்து பாடங்களிலும் எங்கள்
மதிப்பெண் ஒரே மாதிரியாக இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரி
மன்யா என்னை விட அதிகமாக படித்தார். கூடுதலாக மதிப்பெண் வரும் என
எதிர்பார்த்தார். ஆனால் இருவரது மதிபெண்களும் ஒரே மாதிரியாக வந்துவிட்டது.
நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து படிப்போம். சந்தேகம் ஏதாவது இருந்தால்
எங்களுக்குள் கலந்துரையாடி தீர்த்துக் கொள்வோம்' என்றார்.
தங்கள் மகள்கள் ஒரே மாதிரியாக மதிப்பெண்கள் எடுத்தது வியப்பையும்,
மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது ஒரு
அற்புதமான உணர்வு என்றும் தெரிவித்துள்ளனர். மாணவிகள் இந்த மகிழ்ச்சியை
தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...