சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தில் 99.61 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 21,387 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 15 மாணவர்கள் எழுதினர்.
இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் மாற்று ஏற்பாடுகள் மூலம் அனைத்து பணிகளையும் முடித்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது.
தேர்வை எழுதிய மாணவர் களில் 91.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.36 சதவீதம் அதிகம்.
மாணவிகள் 93.31 சதவீதமும், மாணவர்கள் 90.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களைவிட தேர்ச்சி வீதத்தில் மாணவிகள் 3.17 சதவீதம் அதிகமாகும்.
மண்டலவாரியான தேர்ச்சி யில் 99.28 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த 2, 3-ம் இடங்களில் சென்னையும் (98.95%), பெங்களுரூவும் (98.23%) இருக்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளாக திரு வனந்தபுரம் மற்றும் சென்னை மண்டலங்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பது குறிப்பிடத் தக்கது.
அதேபோல், மாநிலவாரியான தேர்ச்சியில் 99.61 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகம் முதலி டத்தை பிடித்துள்ளது. மொத்தம் 62,253 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 62,015 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கேரளா 99.5 சதவீத தேர்ச்சியுடன் 2-ம் இடத்தில் உள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தேர்வெழுதியவர்களில் 23,400 மாணவர்கள் (98.67%) தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...