உடலில் நல்ல கொழுப்புகள் கெட்டகொழுப்புகள் இரண்டும் உண்டு. ஹெச் டி எல் எனப்படும் மிக அடர்த்தியான கொழுப்பு நல்ல கொழுப்பு என்றும், எல் டி எல் எனப்படும் குறை அடர்த்தி கொண்ட கொழுப்பு கெட்ட கொழுபு என்றும், விஎல்டிஎல் மிக குறை அடர்த்தி கொழுப்பு என்றும், முக் கிளிசரைடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்புகள் 200 மி.கிராம் அளவு மேல் செல்லும் போது மாரடைப்புக்கான வாய்ப்புகள் உருவாகிறது. நல்ல கொழுப்பு 35 மி.கிராமுக்கு குறைவாக இருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உண்டு. அதே போன்று கெட்ட கொழுப்பு 100 மி.கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கெட்ட கொழுப்புகள் அதிகம் தங்கினால் உடலில் இதய நோய் அபாயத்தை உண்டாக்கி விடவும் வாய்ப்புண்டு. கெட்ட கொழுப்பை கரைக்கும் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துகொண்டால் கொழுப்பு எளிதாக கரையக்கூடும்.
பூண்டு
உணவில் அடிக்கடி பூண்டை சேர்ப்பது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் வேதிப்பொருள் இருகிறது. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை பெற என்ன செய்யலாம்?
உணவில் பூண்டை சேர்த்து கொள்ளலாம். வாரம் ஒருமுறை பூண்டை தோல் உரித்து பாலில் வேகவைத்து குடிக்கலாம். பூண்டை வறுத்து சாப்பிடலாம். பூண்டை சுட்டும் சாப்பிடலாம். ஏதேனும் ஒரு வகையில் பூண்டு எடுத்துகொள்வது நன்மை தரும்.
க்ரீன் டீ
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தாவர கலவையான தேநீருக்கும் அதிக பங்குண்டு. குறிப்பாக க்ரீன் டீ விசேஷமானடு.இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்குகிறது. இதிலிருக்கும் கேடசின்ஸ், குர்செடின் இரண்டும் இரத்த நாளங்களின் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பு தேக்கத்தை கட்டுப்படுத்துகிறது. தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைத்து வெளியேற்றப்படுகிறது.
காய்கறிகள்
இதய ஆரோக்கியத்தின் முக்கிய உணவின் ஒரு பகுதி காய்கறி ஆகும். காய்கறிகளில் அதிக நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள், கலோரிகள் குறைவாக உண்டு. இவை உடல் எடையை ஆரோக்கியமாக வைப்பதோடு கொழுப்பை கரைக்கும் நார்ச்சத்தும் இதில் உண்டு. குறிப்பாக பெக்டின் அதிகமுள்ள வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், பரங்கிக்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கலாம். பீன்ஸில் நிறைவான அளவு இருக்கும் நார்ச்சத்தும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் குணமும் கொண்டவையே. வெங்காயம் சேர்ப்பது கூட கொழுப்பை கரைக்கும். வெங்காயத்தில் இருக்கும் கியர்சிடின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது ரத்தகுழாய்களில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் குணம் கொண்டவை.
சத்து நிறைந்த கீரை வகைகள் எடுக்கும் போது அடிக்கடி பசலைக்கீரையை சேர்த்து வரலாம். பசலைக்கீரையில் இருக்கும் லுடீன் என்னும் பொருள் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பழ வகைகள்
இதய ஆரோக்கியமான உணவுக்கு பழங்களை சேர்ப்பதும் மிக முக்கியமானது. கரையக்கூடிய நார்ச்சத்து கொண்ட பழங்கள் உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. பெக்டின் எனப்படும் ஒரு வகையான நார்கொழுப்பை 10 % வரை பழங்கள் குறைக்கிறது.
பழங்களில் ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி,ராஸ்பெர்ரி, செர்ரி பழங்களும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. அவகேடோவில் மேனோசாச்சுரேட்டர் ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இவை இரண்டுமே கொழுப்பை கரைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஆய்விலும் இவை கண்டறியப்பட்டுள்ளது.
பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் திறனை கொண்டிருப்பதால் இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பையும் வெளியேற்றலாம். மேலும் கொழுப்புகள் உடலில் சேராமலும் தடுக்கலாம்.
உலர் பருப்புகள்
பொதுவாக கொட்டைகள் ஊட்டச்சத்து நிறைந்த அடர்த்தியான உணவு. குறிப்பாக பாதாம் மற்றும் அக்ரூட் கொட்டைகளில் மோனொசேச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது. வால்நட்-டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.இதய ஆரோக்கியத்துடன் பாலிஅன்சாச்சுரேட்டர் கொழுப்பு இது. அதோடு பாதாம் கொட்டையிலும் எல் அர்ஜினைன் என்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
கொட்டைகளில் இருக்கும் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில் தினமும் 4 கொட்டைகள் வரை சாப்பிட்டு வந்தவர்களுக்கு மோசமான எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைந்தது கண்டறியப்பட்டது.
சோயா உணவுகள்
சோயாபீன் பருப்பு வகைகள் இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை செய்கிறது. ஆய்வின் படி சோயா உணவுகள் கெட்ட எல்டிஎல் உணவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். உடலில் அதிக கெட்ட கொழுப்புகள் இருப்பவர்கள் அடிக்கடி சோயா உணவுகளை எடுத்துவந்தால் நல்ல கொழுப்புகள் அதிகரித்து கெட்ட கொழுப்புகள் வெளியேறும். மேலும் இவை இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். குறிப்பாக கொழுப்பு நிறைந்தவர்கள் இதய நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்றாலும் அதை தவிர்க்க இந்த சோயா உணவுகள் உதவும்.
ஆலிவ் ஆயில்
உடலில் கெட்ட கொழுப்புகள் இருப்பவர்கள் சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் கரைக்கமுடியும்.ஆலிவ் ஆயில் பாலிபினால்களின் மூலம். இவை மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் மூலம். இவை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
இலவங்க பட்டை ஒண்ணு போதும், நுரையீரல்ல இருக்கிற அடர்த்தியான சளியும் கரைந்து வெளியேறும்!
குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள் குறித்த ஆய்வில் இதய நோய் அபாயத்தில் உள்ள வயதானவர்களுக்கு ஆலில் ஆயில் பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய பாதிப்பில் 30 % வரை குறைவான பாதிப்பையே உண்டாக்கியது தெரியவந்தது.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பதில் இன்னும் பல்வேறு உணவு பொருள்கள் உண்டு. எனினும் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்கள் இவை என்பதால் இதை கூடுதலாக சேர்ப்பது நன்மை தரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...