இப்பொழுதும் நாம் மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது சில தவறுகளை செய்து வருகின்றோம். மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை இந்த பதிவில் காண்போம்.
புதிய மொபைல் வாங்கும் பொழுது இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டும் என சிலர் கூற கேட்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். பெரும்பாலும் இன்றைய மொபைல்கள் 40-80 சதவீதம் சார்ஜ் உடன் தான் வருகின்றன.
பெட்டிலயிலிருந்து எடுத்தவுடன் நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். சார்ஜ் போட்டு கொண்டே சிலர் கால் பேசிக்கொண்டு மற்றும் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.
இதனால் மொபைல் சூடாகின்றது. சிலர் உங்கள் மொபைலை அதனுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட சார்ஜரில் சார்ஜ் செய்யவேண்டும் என்று சிலர் கூறி இருப்பார்கள். இது தவறு.
நீங்கள் வேறு எந்த சார்ஜரிலும் சார்ஜ் செய்யலாம். ஆனால் தரமற்ற சார்ஜர்களில் சார்ஜ் செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் மொபைலை இரண்டு மொன்று நாட்களுக்கு ஒரு முறை ஆஃப் செய்து திரும்ப ஆன் செய்வதால் உங்கள் மொபைல் சிறப்பாக செயல்படும்.
எப்பொழுதும் உங்கள் மொபைலை 0% சதவீதம் வரை உபயோகிக்க கூடாது. 20% சதவீதத்திற்கு குறையும் பொழுது சார்ஜ் செய்ய வேண்டும். அதே போல் உங்கள் மொபைலை 100% சதவீதம் வரை சார்ஜ் செய்ய கூடாது. 80-90% சதவீதம் வரை சார்ஜ் செய்வது நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...