தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10ம் தேதி ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலைப் பள்ளிகள் சங்கத்தின் சமார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் இந்த பட்டினிப் போராட்டம் தொடங்கி மாலை வரை நடக்கிறது. இது குறித்து மேற்கண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், தமிழகம் முழுவதும் நடக்கும் இந்தப் பட்டினிப் போராட்டத்தில் 5 லட்சம் ஆசிரியர்கள், 5 லட்சம் பணியாளர்கள் தங்கள் வீடுகள் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
*சாப்பாட்டு ராமன் போட்டி*
ReplyDeleteஇன்று காலை சரியாக 10 மணிக்கு வயிறு நிரப்பும் போட்டி ( அன்லிமிட்டேடு மீல்சை முதலில் சாப்பிடுவது யார் என்று)நடைபெற உள்ளது.ஆகவே அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முதல் பரிசு *ரூபாய் 1000*
இரண்டாம் பரிசு *ரூபாய் 500*
மூன்றாம் பரிசு *ரூபாய் 250*
இடம்: தி.கோடு,குமரமங்கலம்
Entry Fee:₹.100
For Reg: 9865445156.
கலந்து கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆறுதல் பரிசு உண்டு.நடுவர்கள் தீர்ப்பே உறுதியானது மற்றும் இறுதியானது.