தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டியின் தலைவராக இருந்த, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணியின் பதவிக்காலம், இந்தாண்டு மார்ச்சில் முடிந்த நிலையில், அந்த இடத்தில், புதிய தலைவரை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூன்றாண்டு காலத்துக்கு, தலைவராக பணியாற்றுவார் என, கூறப்பட்டுள்ளது.இந்த கமிட்டியில், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி ஆகியவற்றின் இயக்குனர்கள், பொதுப்பணி துறையின் இணை தலைமை இன்ஜினியர், பள்ளி கல்வித் துறையின் இணை செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் நேற்று பிறப்பித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...