ஓர் ஊரில் தையல்காரர், தச்சர், விறகு வெட்டி மூவரும் நண்பர்கள் இருந்தனர்.
அவர்கள் மூவருமே சோம்பேறிகளாக இருந்தனர். எந்த வேலையையும் மெதுவாகச்
செய்தேன்.
அதனால் அந்த ஊரில் யாரும் அவர்களை நம்பி வேலை தருவது இல்லை
பக்கத்து நாட்டிற்குச் சென்று பிழைக்கலாம் என்று மூவருமே முடிவு செய்தனர். காட்டு வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து அவர்கள் ஓய்வு எடுப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் முன் தேவதை ஒன்று தோன்றியது.
உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும்? கேளுங்கள்'' என்றது
தையல்காரர் என்ன வரம் கேட்பது என்று சிந்தித்தார். 'தைக்க துணியை இழுத்தால் அது வந்து கொண்டே இருக்க வேண்டும். A.
கூடாது' என்று நினைத்தார்
தேவதையே! நான் எதை எடுத்தாலும் அது நீண்டு வந்த கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்
அப்படியே வரம் தந்தேன் என்றது தேவதை
தச்சர் தேவதையே! நான் எந்த இரண்டு பொருள்களைச் சேர்த்தாலும் அவை பிரியவே கூடாது" என்றார்.
"அப்படியே தந்தேன்" என்றது தேவதை
விறகு வெட்டியோ "தேவதை! நான் எதைத் தட்டினால் அது இரண்டாகப் பிளந்து கொள்ள வேண்டும்” என்றார்
அப்படியே வரம் தந்தேன் என்ற தேவதை அங்கிருந்து
மறைந்தது
மகிழ்ச்சியுடன் தச்சர் ''நான் இனி எதையும் ஆணி போட்டு இணைத்துத் துன்பப்பட வேண்டாம். நான் தொட்டால் போதும். மரம் இணைந்து விடும்” என்றார்
உன்நிலையைப் போல்தான் என் நிலையும். நான் எந்த மரத்தையும் வெட்டி வீழ்த்தத் துன்பப்பட வேண்டாம். மெல்லத் தட்டினால் போதும்
அந்த மரம் பிளந்து கீழே விழுந்து விடும்" என்றார் விறகு வெட்டி
அவர்கள் மூவரின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை .
தச்சரின் மூக்கு முனையில் அரிப்பு எடுத்தது. மூக்கைப் பிடித்துத் தடவினார் அவர். விரல்களை வெளியே எடுக்க எடுக்க அவர் மூக்கும் விரல்களுடன் ஒட்டியபடி நீண்டு கொண்டே வந்தது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தேன்.
அவர் இப்படித் துன்பப்படுவதைப் பார்த்த விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கையால் தன் தொடையில் தட்டினார்.
அவ்வளவுதான் அவர் கால் இரண்டாகப் பிளந்தது. வேதனை தாங்க முடியாமல் துடித்தார் அவர்
இருவரும் துன்பப்படுவதைப் பார்த்த தச்சர் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். அப்பொழுது அவர் கை ஒன்று காலைத் தொட்டு.
அவ்வளவுதான் கையும் காலும் ஒட்டிக் கொண்டன. நிமிர முடியாமல் அப்படியே துன்பப்பட்டார் அவர்.
மூவரும் தேவதையே! கொடுத்த வரத்தைத் திரும்ப வாங்கிக் கொள். நாங்கள் இனி உண்மையாக உழைப்போம். சோம்பேறிகளாக இருக்க மாட்டோம்'' என்று அழுது புலம்புவார்கள்.
அவர்கள் மீது இரக்கப்பட்ட தேவதை தான் கொடுத்த வரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...