இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அனைத்து துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...