பேஸ்புக்கில் சுமார் 8.7 கோடி பயனாளிகளின் தகவல்கள் திரு டப்பட்டதாகவும்,
அத்தகவல் கள் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக கேம் பிரிட்ஜ்
அனலிட்டிகா நிறுவனத் துக்கு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. அதை
பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்ட நிலையில், இந்திய பய னாளிகளின்
தனிப்பட்ட தகவல் களும் திருடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு
எழுந்தது.
அந்த தகவல்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி கள் வியூகங்கள்
வகுப்பதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறு வனம் உதவியதாக கூறப்பட் டது.
இதுகுறித்து பேஸ்புக் நிறு வனத் துணைத் தலைவர் கோன்ஸ் டான்டினோஸ்
பாப்பாமில்டியா டிஸ் கூறும்போது, “பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் 5 ஆயிரம்
டெவலப்பர்களுக்கு தவறுதலாக பகிரப்பட்டுள்ளதை அண்மையில் கண்டறிந்தோம். அதை
கண்டுபிடித்த மறுநாளே சிக்கலை சரிசெய்தோம். நாங்கள் இந்த பிரச்சினை
குறித்து தொடர்ந்து விசாரணை நடத்து வோம். மேலும் எந்தவொரு விஷ யத்துக்கும்
வெளிப்படைத்தன் மைக்கும் முன்னுரிமை அளிப் போம். இதைத் தொடர்ந்து புதிய
அமைப்புக்கான விதிகள், டெவலப்பர் கொள்கைகளை அறிமுகம் செய்துள்ளோம்” என்று
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...