இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள், இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஜூலை, 15 முதல், நேற்று வரை, 1.26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டில், சான்றிதழ் சரிபார்ப்பு, மாணவர்களிடம் நேரில் நடத்தப்பட்டது. இந்த முறை, கொரோனா தொற்று பிரச்னையால், ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.எனவே மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், வீட்டில் இருந்தபடியே சான்றிதழ் பிரதிகளை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவு இன்று துவங்க உள்ளது. வரும், 20ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, 044 - 2235 1014, 2235 1015 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், சந்தேகங்களை விளக்கும் வீடியோ பதிவுகள், இன்ஜினியரிங் சேர்க்கை இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன.பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை, அனுபவம் உள்ள பேராசிரியர்கள் சரிபார்க்க உள்ளனர். ஆக., 24 முதல், செப்.,1 வரை சரிபார்க்கப்படும்.
மாணவர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...