"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் என்கிறது குறள் இனிய இல்லறத்தில் மேலும் இனிமை கூட்ட உதவுபவர்கள் மழலைச் செல்வங்களே முன்பெல்லாம் மக்கள் ஒருவ போடு ஒருவர் கலந்து பழகும் போதெல்லாம் நலன் விசாரிக்கையில் உங்களுக்கு எத்தனை வீடு வாசல், சொத்து சுகம் எவ்வளவு எனக் கேட்க மாட்டார்கள் எத்தனை குழந்தைகள். மக் கட் செல்வம் எவ்வளவு என விசாரிப்பார்கள்
காலத்தின் கோலம் இப்போது பிறப்பு விகிதா சா குறைப்பு நடவடிக்கை அதிக மக்கள் தொகையினால் பிள்ளைப் பேறில்லா பெற் றோர் பலர் உண்டு, பிள்ளை பெற்ற வேறு சிலரோ அப்பிள்ளையினாலே தொல்லை பெற்ற பெற்றோரும் உண்டு. இந்த நிலையில் கால பேதமில்லை போலும். ஏனெனில், பழ மொழி பகரும் உண்மை அதுதான்.
சாண் பிள்ளை என்பது இங்கு நாம் ஒரு சாண் அளவு நடும் தென்னங்கன்றைக் குறிப்பிட வேண்டும்
சிறிய தென்னம் பிள்ளையை நட்டு வளர்த்தால்.. அதுவே வளர்ந்து, காய் காய்த்து நமக்குப் பிள்ளையைப் போல வளமையைக் கொடுக்கும். வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை இருந்தால் போதும். குடும்பம் கவலையின்றி வாழ
அவன் எப்பாடுபட்டாவது தன் குடும்பத்தை நன்கு காப் பாற்றுவான். தாய், தந்தை சகோதரி என குடும்ப உறுப்பினர்களைப் போற்றிக் காப்பான். கவலையின்றி வாழலாம் என்னும் பொருளை உணர்த்த உரைத்தது ஆண் சமுதாயத்தை மேன்மை படுத்து முகமாகச் சொன்னாலும், ஒருவர் உழைப்பில் மற்றவர் சோம்பேறி களாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை மறைமுகமாக உள்ளடக்கியது போன்றும் காணப்படுகிறது அல்லவா.
ஆனால் இன்று பல குடும்பங்களில் ஆண் பிள்ளை சம்பாதித்துக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்து கானா... என்பதும் சிந்திக்க வைக்கிறது. உழைப்பின் ஊதியம் முழுமையாக அவன் பெற்றோர், உற்றார் உறவினரைச் சென்றடைகிறதா? பிள்ளை பெற்ற பெற்றோர் எல்லாம் கண்ணீர், கவலை, கஷ்டம் இல்லா மல் வாழ்கிறார்களா? இல்லை. அதே போல் அக்காலந் தொட்டு இருந்திருந்ததலால் தான் இப்பழமொழி பிறந்து இருக்க வேண்டும். நீ பெற்ற பிள்ளை உன்னைக் காப் பாற்றுகிறானோ இல்லையோ நீ வளர்க்கும் தென்னம் பிள்ளை இன்று சாண் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளைக்குச் சமம் கட்டாயம் காப்பாற்றும் என்று இடித்துரைக்கும் மொழியாகும்.... இப்பழமொழி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...