மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல் நல பிரச்சினை ஆகும். இந்த பாதிப்பால் நிறைய பேர்கள் உயிரிழக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டவருக்கு சரியான நேரத்தில் நாம் முதலுதவி செய்தால் அவர்களின் உயிரை நாம் காப்பாற்ற முடியும்.
ஒரு உயிரை காப்பது தான் இருக்கிறதிலயே தலைசிறந்த செயல். அதையும் நாம் சரியான நேரத்தில் செய்தால் அதைவிட பெரிய விஷயம் கிடையாது. அந்தவகையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவியின் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்ற நம்மால் முடியும்.
முதலுதவி என்பது ஆபத்தான நிலையில் உள்ளவருக்கு உடனே விரைவாக சரியான முறையில் செய்யப்படும் மருத்துவ உதவியாகும். விபத்து ஏற்பட்டவருக்கு, நீரில் மூழ்கியவருக்கு மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு முதலுதவி அவசியம்.
திடீர் மாரடைப்பு
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்க்கு எந்த மாதிரியான உதவிகளை பண்ண வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இதனால் உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறக்கின்றனர், இது உலகளவில் இறப்புகளில் 31% ஆகும். உண்மையில், அனைத்து இறப்புகளிலும் 85% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இது குறித்து இருதய நிபுணர் கூறுகையில் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உடனடியாக நீங்கள் முதலுதவி சிகிச்சை அளித்தால் அவர் உயிர் பிழைக்க நிறையவே வாய்ப்பு உள்ளது என்கிறார்.
எனவே ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பின் அறிகுறிகளை வைத்து அவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.
மாரடைப்பின் அறிகுறிகள்
இதயத்தில் வரும் பிரச்சினைகளை பொருத்த வரை இரண்டு விஷயங்கள் உள்ளன.
1. மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது.
மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15-20 நிமிடங்களுக்கும் குறைவாக நீடிக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் நேராது.
இதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பில் 20 நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தல்
தாடைக்கு வலி பரவுதல்
தலைசுற்றல்
வியர்வை
மூச்சு விட சிரமம்
ஏற்படும். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே இந்த 6 முதலுதவி விஷயங்களை செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட நபரை வசதியாக அமர வையுங்கள்
மாரடைப்பு அறிகுறிகள் இருக்கும் நபர் படுத்துக் கொள்ள விரும்பினால் அவர் படுத்துக் கொள்ளட்டும். அவரை வசதியாக இருக்க விடுங்கள்.
மூச்சுவிட வசதி
அந்த நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். புதிய காற்றை சுவாசிக்கட்டும். அவர்களைச் சுற்றி மற்றவர்கள் நிற்காதீர்கள். அவருக்கு காற்று வர இடம் வருமாறு செய்யுங்கள்.
இறுக்கமான ஆடைகளை அவிழ்த்து விடுங்கள்
அந்த நபர் இறுக்கமாக ஆடை அணிந்து இருந்தால் அதை அவிழ்த்து விடுங்கள். இது அவர் மேலும் நன்றாக சுவாசிக்க உதவியாக இருக்கும்.
அஸ்பிரின் மருந்து கொடுங்கள்
குறிப்பாக உடலில் செல்கின்ற இரத்தம் உறைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தம் இதயத்தை அடைவது தடுக்கப்படுகிறது. எனவே அஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் வீட்டிலேயே வைத்திருங்கள். இந்த மாத்திரை உங்களுக்கு அடிக்கடி பயன்படா விட்டாலும் ஆபத்தான சூழ்நிலையில் பயன்படும். இது இரத்தம் உறைந்ததை சரி செய்து இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை பாய்ச்சும்.
அவசர எண்ணை அழைக்கவும்
குடிக்க சிறிது தண்ணீர் கொடுங்கள்
அவர் குடிக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை குடித்து ரிலாக்ஸ் செய்யுங்கள்.
அவசர எண்ணை அழைக்கவும்
சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வர சிறிது நேரம் ஆகலாம். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக அந்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
மேலும் அவசர எண் 102 யை உங்க மொபைல் போனில் எப்பொழுதும் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை பார்த்து பீதியடைய வேண்டாம்.
அதே நேரத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அருகில் எந்த மருத்துவமனை வசதி என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே மாதிரி உங்க வீட்டைச் சுற்றி உள்ள மருத்துவமனையின் தொடர்பு விவரங்களையும் நீங்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். ஏனெனில் அவசர நேரத்தில் கூகுலில் தேட நேரம் இருக்காது. எனவே அவசர காலங்களில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் அறிந்து சேகரித்து வைத்து இருங்கள்.
மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...