எடை இழப்பு என்றாலே உடற்பயிற்சி, ஜிம், டயட் இது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் உண்மையில் இவையில்லாமே எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க முடியுமாம். அதென்ன டிரிக்ஸ் என்று யோசிக்கிறீர்களா. இந்த எளிய டிரிக்ஸ்கள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இந்த டிரிக்ஸ்களை பின்பற்ற வீட்டில் இருக்கும் பொருட்கள் கையில் இருந்தாலே போதும். எளிதாக நாம் உடல் எடையை குறைக்க முடியும்.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகர் எடையை குறைக்க பயன்படுகிறது. இது குறைந்த கலோரி கொண்ட பானம் என்பதால் கொழுப்பை எரிக்க பயன்படுகிறது. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்கும். ஆப்பிள் சிடார் வினிகர் வொயிட் வினிகரைப் போலே அசிட்டிக் அமிலத்தன்மை வாய்ந்தது. இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் உடல் பருமன் குறைப்பு போன்ற பண்புகள் காணப்படுகின்றன.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து மெதுவாக குடியுங்கள். 15 நாள் கழித்து உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் உணவில் சேருங்கள்
தேங்காய் எண்ணெய் பொதுவாக முடி மற்றும் சருமத்திற்காகவே பயன்படுகிறது. ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெய் கொண்டு நீங்கள் சமைத்தால் விரைவாக எடையை குறைக்க முடியும். தேங்காய் எண்ணெய் இயற்கையில் தெர்மோஜெனிக் என்ற பண்பை கொண்டுள்ளது. இது கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதன் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு எண்ணெய் எடை இழப்பை கொடுக்கும். எனவே உங்க ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
பயன்படுத்தும் முறை
உங்கள் அன்றாட உணவை சமைக்கும் போது, ஆயில் பில்லிங், தேங்காய் எண்ணெய் காபி போன்ற பல வழிகளில் நீங்கள் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி எடையை குறைக்க முடியும்.
செரிமானத்தை மேம்படுத்த இஞ்சி
இஞ்சி இந்திய சமையல்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இந்த இஞ்சி வேர் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. செரிமானம் சீராக செயல்பட உதவுகிறது. இது மெட்டா பாலிசத்தை அதிகமாக்குகிறது.
பயன்படுத்தும் முறை
உங்க உடல் எடையை குறைக்க இஞ்சி மற்றும் சீரகம் கலந்த டீயை நீங்கள் குடிக்கலாம். இது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
கொழுப்பை எரிக்க பயன்படும் மஞ்சள்
மஞ்சள் ஆரோக்கியமானது மட்டுமல்ல நோயெதிரிப்பு சக்தி மிகுந்தது. இதன் மூலம் நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை எடை அதிகரிப்பை போக்கி எடையை குறைக்க பயன்படுகிறது. இதிலுள்ள குர்குமின் ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதிரி செயல்பட்டு அழற்சியை குறைத்து கொழுப்பை குறைக்க பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை
மஞ்சளை நீங்கள் தினசரி உணவில் சேர்த்து வரலாம். கருப்பு மிளகு மற்றும் மஞ்சளை சேர்த்து பயன்படுத்தும் போது எளிதாக கொழுப்பை குறைக்க முடியும்
நச்சுக்களை வெளியேற்ற உதவும் லெமன்
லெமன் ஜூஸ் நச்சுக்களை வெளியேற்ற உதவும் பானமாகும். உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்க காலையில் ஒரு டம்ளர் நீரில் லெமன் ஜூஸ் கலந்து குடியுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி உடம்பை சூப்பர்சார்ஜ் செய்கிறது. லெமன் உடம்பை கார நிலையில் வைக்கிறது. இது எடை இழப்பை தூண்டுகிறது. நச்சுக்களை வெளியேற்றி உடம்பை சுத்தப்படுத்துகிறது. எனவே இதை வழக்கமாக நீங்கள் செய்து வந்தால் உங்க செரிமானம் சீராக இயங்குவதற்கும், எடை பிரச்சனையை பயனுள்ள வகையில் நிர்வகிக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸை 1 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். எழுந்தவுடன் இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள். விரைவில் உடல் எடை குறையும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...