கடந்த, 2018 -- 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2018 - 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஆகஸ்ட், 30ல் முடிந்தது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இந்தாண்டு, மார்ச், 31ல் முடிந்தது.கொரோனா தொற்று பரவலால், இந்த அவகாசம், முதலில் இன்று வரை இருந்தது. தற்போது, செப்டம்பர், 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:தொற்று காரணமாக, கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் வைத்து, இந்த அவகாசம், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பாணையை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...