தமிழகத்தில் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.பொறியியல் பகுதி நேரப் படிப்பு, எம்பிஏ, எம்சிஏ, முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் இணையதளம் மூலமாகவே நடைபெறும் எனவும் கூறினார். அதனை ஏற்று 3-வது முறையாக கல்வி ஆண்டு அட்டவணையில் திருத்தங்களை செய்து கடந்த ஜூலை 10ம் தேதி ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை அக்டோபர் 20 வரை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது
மேலும், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை ஆகஸ்ட் 15-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். இதுதவிர பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான முதல்சுற்று கலந்தாய்வை அக். 5-க்குள் முடிக்க வேண்டும். மேலும், 2, 3-ம் சுற்று கலந்தாய்வை வருகின்ற அக்டோபர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் 2, 3, 4-ம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்.15-ல் ஆரம்பிக்கப்பட வேண்டும். முதுநிலை பட்டய மற்றும் சான் றிதழ் படிப்புக்கான வகுப்புகளை ஜூலை 15-ல் தொடங்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை பணி களை ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகள் வகுப்புகளை இணையவழியிலும் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக உயர்க் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டியில் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும், மேலும் பகுதி நேரப் படிப்பு, எம்பிஏ, எம்சிஏ, முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் இணையதளம் மூலமாகவே நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...