மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதியே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது. பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு முடிவு பல்வேறு வினாக்களை எழுப்பியது. இந்தநிலையில், ஈரோடிற்கு நாளை தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வருகின்றார். இதனை பார்வையிட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் திடீரென பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதே..இது உங்களுக்கு தெரிந்து அறிவிக்கப்பட்டதா ? அல்ல தெரியாமல் அறிவிக்கப்பட்டதா ? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்க கூடாது. அறிவித்தது நல்லதா ? கெட்டதா என்று கேட்க அதற்கு பத்திரிக்கையாளர்கள் நல்லது என்று சொல்லி முடிப்பதற்குள் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பாதியிலே சென்றுவிட்டார். இது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதியே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும், 24.03.2020 அன்று நடைபெற்ற பன்னிரெண்டாம் தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளிடப்படும். 27.07.2020 அன்று நடைபெற உள்ள 12ம் வகுப்பு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு , மறுதேர்வு முடிவடைந்த பின்னர் தேர்வு எழுதிய அனைத்துப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...